விஜய் நடிப்பில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகை ரிலீஸாக ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இந்த படத்தை இயக்கியுள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் சீரான இடைவெளியில் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. முதலாவதாக வெளியான ரஞ்சிதமே பாடல் இதுவரை 10 கோடி பார்வையாளர்கள் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

சமீபத்தில் தீ என்கிற இன்னொரு பாடலும் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தில் சோல் ஆப் வாரிசு என்கிற பெயரில் அம்மாவை பற்றிய அருமையான பாடல் மூன்றாவதாக வெளியாகி உள்ளது.

இந்த பாடலை சின்னக்குயில் சித்ரா பாடியுள்ளார். தாய்ப்பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த பாடல், நிச்சயம் படம் வெளியாகும்போது தாய்மார்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பாடலை கேட்கும்போதே தெரிகிறது.
