HomeNewsKollywoodபிரியா அட்லீ வளைகாப்பு விசேஷத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய விஜய்

பிரியா அட்லீ வளைகாப்பு விசேஷத்தில் கலந்துகொண்டு வாழ்த்திய விஜய்

இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணிபுரிந்து ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ. முதல் படத்திலேயே தனி முத்திரையை பதித்த இவர் அடுத்ததாக விஜய் நடித்த தெறி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று அவரது அன்புக்கு பாத்திரமாகி அடுத்தடுத்து அவரை வைத்தே மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார்.

தற்போது பாலிவுட்டுக்கு சென்று ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. கடந்த 2014ல் இவருக்கும் சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ப்ரியாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் எட்டு வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் தங்களது வீட்டில் ஒரு புதிய வாரிசை எதிர்பார்க்க தயாராகிவிட்டார்கள் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது. இதையடுத்து கர்ப்பமாக இருக்கும் பிரியாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் விஜய் கலந்துகொண்டு ப்ரியா, அட்லீ இருவருக்கும் தங்களது தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதற்கு முன்னதாக ஜவான் படத்திற்காக ஷாருக்கானை வைத்து சென்னையில் அட்லீ படப்பிடிப்பு நடத்திய சமயத்தில் அங்கே திடீர் விசிட் அடித்த விஜய் அட்லீக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments