HomeNewsKollywoodபுதிய கார் வாங்கி குருவிடம் ஆசி பெற்ற சுதா கொங்கரா

புதிய கார் வாங்கி குருவிடம் ஆசி பெற்ற சுதா கொங்கரா

தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் அதிகம் வந்ததில்லை.. அப்படியே வந்தாலும் பெரிய அளவில் யாரும் சாதித்தது இல்லை என்கிற ஒரு மனக்குறை பலருக்கும் உண்டு.. அதை பலரும் குற்றச்சாட்டாகவே கூட வைத்துள்ளார்கள். இதையெல்லாம் தகர்த்தெறிந்து இறுதிச்சுற்று, சூரரைப்போற்று என தொடர் வெற்றிகளால் மிகப்பெரிய கமர்சியல் இயக்குனராக வலம் வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

இதைத்தொடர்ந்து அடுத்ததாக தான் இயக்க உள்ள படத்தில் பணிகளில் தீவிரமாக இருக்கிறார். இந்த நிலையில் தற்போது முதன் முறையாக புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார் சுதா கொங்கரா.

இதை தொடர்ந்து தனது குருநாதர் மணிரத்னத்திடம் சென்று தனது காரை காட்டி மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் பெற்று உள்ளார் சுதா கொங்கரா.

அதுமட்டுமல்ல திரையுலகில் தனது சக நண்பர்களான நடிகர் சூர்யா, ஜிவி பிரகாஷ், தயாரிப்பாளர் ராஜசேகர பாண்டியன் ஆகியோரையும் தனது புதிய காரில் ஜாலியாக ஒரு ட்ரிப் அடித்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார் சுதா கொங்கரா.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments