HomeNewsKollywoodராம்சரணுக்கு பிறகு நல்ல செய்தி  சொன்ன அட்லீ

ராம்சரணுக்கு பிறகு நல்ல செய்தி  சொன்ன அட்லீ

தெலுங்கு திரை உலகில் நடிகர் சிரஞ்சீவியின் மகனாக ஒரு வாரிசாக நடிப்பு பயணத்தை தொடங்கியவர் ராம்சரண். கிட்டத்தட்ட பத்து வருடத்திற்கு முன்பு அவருக்கும் அப்பல்லோ மருத்துவர் குழுமத்தை சேர்ந்த உபாசனா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. பத்து வருடங்களாக தம்பதியர் இருவரும் குழந்தை இல்லாத நிலையில் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை கணவருடன் இணைந்து வெளியிட்டார் உபாசனா.

இந்த நிலையில் தற்போது தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனராக அட்லீயும் அவரது மனைவி பிரியாவும் விரைவில் நாங்கள் இருவரும் புதிய வாரிசு ஒன்றை உங்கள் வீட்டில் எதிர்பார்க்க தயாராகிவிட்டதாக ஒரு மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்.

2014ல் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதை தொடர்ந்து முதல் முறையாக இவர்கள் இருவரும் பெற்றோராக போகின்றனர் இதுகுறித்து இவர்கள் இருவருக்கும் ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments