HomeNewsKollywoodதன்னை விட பத்து வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன்

தன்னை விட பத்து வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனனை பொருத்தவரை துணிச்சலான கதா பாத்திரங்களை ஏற்று நடிக்க தயங்காதவர். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் வெளிச்சம் பெற்ற இவர், அடுத்ததாக விஜய்யுடன் இணைந்து மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து தனுஷுடன் மாறன் படத்தில் நடித்த இவர், தற்போது கிறிஸ்டி என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மலையாளத்தில் உருவாகும் இந்த படம் ஒரே சமயத்தில் தமிழிலும் சேர்த்து தயாராகிறது.

இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள இளம் நடிகர் மேத்யூ தாமஸ் நடிக்கிறார். இதில் மேத்யூ தாமஸ் இருபதே வயதானவர் என்பதும் மாளவிகா மோகனன் கிட்டத்தட்ட முப்பது வயதை நெருங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிமுக இயக்குநர் ஆல்வின் ஹென்றி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் இது உண்மை சம்பவத்தை மையப்படுத்தி காதல் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

இப்படத்தின் திரைக்கதையை பிரபல எழுத்தாளர் பென்யமின் மற்றும் ஜி.ஆர். இந்துகோபன் ஆகியோர் இணைந்து எழுதியிருக்கிறார்கள். 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments