சமீபகாலமாகவே சோசியல் மீடியா மற்றும் டிவி சேனல்களில் கூட ரகட் பாய்ஸ் வெர்சஸ் சாக்லேட் பாய்ஸ் என்கிற விவாதம் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது. பெண்களுக்கு இதில் யாரை பிடிக்கும் என்கிற கேள்வியை பார்க்கும் பெண்களிடமெல்லாம் மீடியாக்காரர்கள் கேட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழலில் ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது.. இதை ஸ்டார் மியூசிக் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது.


பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன் காதலில் விழுகிறான். கட்டுக்கடங்காத காளையாக இருந்தவனைக் காதல் எப்படிக் கட்டுத்தறிக் காளையாக மாற்றுகிறது என்பதுதான் இந்தப் பாடலின் மையக்கருத்து.


ஒரு பதின் பருவக் காதலால் எப்படிப் புலி ஒன்று பூனையாக மாறுகிறது என்பது தான் கதை. இந்த ஆல்பத்தில் கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ளார் அஜய் கிருஷ்ணா.
மூக்குத்தி அம்மன், வானம், சமீபத்தில் வெளியானவெலோனி வெப்சீரிஸ் உள்ளிட்டவற்றில் நடித்துள்ள ஸ்மிருதி வெங்கட் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


ஒரு திரைப்படத்திற்கான முன்னோட்டமாக இந்த இசை ஆல்பம் உருவாகி இருக்கிறது. இதை ஸ்ரீ வித்தகன் என்பவர் இயக்கியுள்ளார்.
பொதுவாக ஆல்பம் என்றாலே நகரப் பின்னணியில் உருவாவதுண்டு. இது ஒரு கிராமத்துக் காதல் கதை .கிராமியப் பின்னணியில் அழகுற காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர், திருநின்றவூர், பூண்டி அணைக்கட்டு போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.


இந்த இசை ஆல்பத்தை நடிகரும் இயக்குநரும் கிராமியப் படங்களுக்கு பெயர் பெற்றவருமான சசிகுமார் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அதேபோல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் வெளியிட்டுள்ளார்.