HomeNewsKollywoodஅசத்தலாக வெளியான ஜிகர்தண்டா டபுளக்ஸ் கிளிம்ப்ஸ் வீடியோ

அசத்தலாக வெளியான ஜிகர்தண்டா டபுளக்ஸ் கிளிம்ப்ஸ் வீடியோ

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோரது நடிப்பில் வெளியான படம் ஜிகர்தண்டா. இந்தப்படத்தில், கேங்ஸ்டர் படம் இயக்க விரும்பும் சித்தார்த் நிஜமான தாதா உலகில் நுழைந்து அவர்களது நடவடிக்கைகளை அலசி அதை மையமாக வைத்து படம் இயக்க முயற்சி செய்வார். ஆனால் நிஜமான தாதாவான பாபி சிம்ஹாவிடம் மாட்டிக்கொண்டு கடைசியில் அவரை நடிகராக வைத்து படம் இயக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்.

இப்படி காமெடி பிளஸ் த்ரில் இரண்டும் கலந்து உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமல்ல நடிகர் பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது பெற்றுத்தந்தது. கடந்த சில வருடங்களாகவே இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஜிகர்தண்டா என்கிற பெயரில் மதுரையில் பூஜையுடன் துவங்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். தற்போது இந்த படத்தில் இருந்து மூன்று நிமிடம் ஓடக்கூடிய கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவருமே வித்தியாசமான தோற்றத்தில் காட்சி அளிக்கின்றனர். படத்தின் கதைக்களமும் கிட்டத்தட்ட எழுபது எண்பதுகளின் பின்னணியில் இருப்பது போல காட்சியளிக்கிறது.

நிச்சயம் ஜிகர்தண்டா படத்தை போல இந்தப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்று இந்த கிரீம் சொல்லாமல் சொல்கிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments