HomeNewsKollywoodதமிழ் குடிமகனாக சேரனின் புதிய அடையாளம்

தமிழ் குடிமகனாக சேரனின் புதிய அடையாளம்

தமிழ் சினிமாவில் வெகுசிலரே இயக்குனர், நடிகர் என இரட்டை குதிரை சவாரியை வெற்றிகரமாக செய்துள்ளனர். இந்த பட்டியலில் இயக்குனர் சேரனுக்கும் முக்கிய இடம் உண்டு. இந்த நிலையில் தற்போது சேரன் தமிழ்க்குடிமகன் என்கிற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்தப்படத்தை இசக்கி கார்வண்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே பகிரி மற்றும் பெட்டிக்கடை ஆகிய படங்களை இயக்கியவர். இந்த தமிழ் குடிமகன் படத்தில் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இயக்குனர் சேரனின் பிறந்த நாளான இன்று இந்த படத்தின் போஸ்டர்களை வித்தியாசமான முறையில் வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக பாமரன் பயணிக்க வாகன ஓட்டிகளான ஆட்டோ நண்பர்கள் மற்றும் நாட்டின் தூய்மை பணியில் தங்களை அர்ப்பணித்த உயர்ந்த மனிதர்களான தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிகழ்வுகளில் இயக்குனர் சேரனும் கலந்துகொண்டார். தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு உரிமையை மாநாட்டு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments