V4UMEDIA
HomeNewsKollywoodரங்கோலி பள்ளி மாணவர்களின் கதைதான் ; ஆனால் வேற மாதிரி

ரங்கோலி பள்ளி மாணவர்களின் கதைதான் ; ஆனால் வேற மாதிரி

கடந்த சில நாட்களாகத்தான் தமிழ் சினிமாவில் பள்ளி மாணவர்கள் பற்றிய கதை குறைந்திருக்கிறது என்று சொல்லலாம். அந்த குறையை போக்கும் விதமாகவோ அல்லது திரும்பவும் பள்ளி மாணவர்கள் கதையை கையில் எடுத்து விட்டார்களே என்று சொல்வது போலவோ தயாராகியுள்ள படம் தான் ரங்கோலி.

ஆனால் வழக்கமான பள்ளி மாணவர்களின் படமாக இது இல்லாமல் வித்தியாசமாக உருவாகி உள்ளது. குறிப்பாக ஸ்கூல் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையை,  அவர்களது குடும்பங்களை சுற்றிய கதைகளை நம் தமிழ் சினிமா சொல்வதே இல்லை. இப்படம் அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் ஒரு அருமையான குடும்பப்படமாக, இப்போதைய பள்ளி மாணவர்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது. குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியில் இருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படம்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அருண் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் அதர்வா, இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ், நடிகர் சதீஷ் நடிகை வாணி போஜன், நவீன் சந்த்ரா கார்த்திக் ரத்னம் ஆகியோர்  இணைந்து வெளியிட்டனர்.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகாமகிறார். பிரார்த்தனா, சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ்  முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடப்பா ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது.

Most Popular

Recent Comments