V4UMEDIA
HomeNewsKollywoodமாரி செல்வராஜூக்கு மகிழ்திருமேனி எவ்வளவோ பரவாயில்லை ; உதயநிதி ஜாலி கலாட்டா

மாரி செல்வராஜூக்கு மகிழ்திருமேனி எவ்வளவோ பரவாயில்லை ; உதயநிதி ஜாலி கலாட்டா

தடையறத் தாக்க, தடம் என நடிகர் அருண்விஜய்யின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்திய படங்களை இயக்கியவர் இயக்குனர் மகிழ்திருமேனி. தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அவர் இயக்கியுள்ள படம் கலகத்தலைவன்.

இந்த படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். வரும் நவம்பர் 18ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உதயநிதி பேசும்போது, “கொரோனா காலகட்டத்திற்கு முன்பே ஆரம்பித்த படம் இது. இப்போது வரை இந்த படத்தை செதுக்கிக் கொண்டே இருக்கிறார் இயக்குனர் மகிழ்திருமேனி. இந்த படத்திற்காக என்னை 70 நாட்கள் நடிக்க வைத்து வேலை வாங்கி விட்டார்.

இதற்கிடையே மாமன்னன் படப்பிடிப்புக்கு சென்றபோது மாரிசெல்வராஜ் என்னை வைத்து 130 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார். இவருக்கு மகிழ் திருமேனி பரவாயில்லை என்று சொல்லலாம்.

அதேசமயம் இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மகிழ் திருமேனி பார்த்து பார்த்து செதுக்கி இருப்பதால் நிச்சயம் ரசிகர்களுக்கு பிடித்த படமாக இது இருக்கும்” என்று கூறினார்.

Most Popular

Recent Comments