V4UMEDIA
HomeNewsKollywoodகைரேகை பார்ப்பதால் பிரபாஸுக்கு ஏற்பட்ட சிக்கல்

கைரேகை பார்ப்பதால் பிரபாஸுக்கு ஏற்பட்ட சிக்கல்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படம் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது இந்திய அளவில் தெரிந்த முகமாக மாறியவர்தான் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதைத்தொடர்ந்து சாகோ என்கிற கமர்ஷியல் ஆக்ஷன் படத்தில் அவர் நடித்தாலும் அது ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

இந்த நிலையில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் மற்றும் புட்ட பொம்மா புகழ் பூஜா ஹெக்டே இருவரும் இணைந்து நடித்துள்ள படம் தான் ராதே ஷ்யாம்.. விரைவில் இந்த படம் வெளிவர இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானது.

படத்தில் கை ரேகை பார்த்து சொல்லும் கைரேகை நிபுணராக நடித்துள்ளார் பிரபாஸ். கதைப்படி இந்த கைரேகை சொல்வதன் மூலமே பிரபாஸுக்கு சிக்கல் ஏற்படும் என்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது.. குறிப்பாக விதிக்கும் காதலுக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படத்தின் மையமாக இருக்கும் என்பதையும் யூகிக்க முடிகிறது.

இந்த படம் விரைவில் வெளிவர உள்ள நிலையில் மும்பை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு வருகின்றார்கள் பூஜா ஹெக்டே பிரபாஸ் உள்ளிட்ட படக்குழுவினர்.

Most Popular

Recent Comments