V4UMEDIA
HomeNewsKollywoodஇடியட்டின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

இடியட்டின் இசை உரிமையை கைப்பற்றிய திங்க் மியூசிக்

சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு, மற்றும் அதன் இரண்டாம் பாகம் ஆகியவற்றை இயக்கியவர் இயக்குனர் ராம்பாலா. ஹாரர் படங்கள் மூலமாக பேய்கள் ரசிகர்களாகிய நம்மை இருக்கையின் நுனியில் பயத்துடன் அமர வைத்த நிகழ்வுகளை, அப்படியே தலைகீழாக மாற்றி பேய்களே பயந்து ஓடும் வகையில் அவற்றை கலாய்த்து நகைச்சுவையுடன் கூடிய ஹாரர் படமாக கொடுப்பதில் ராம்பாலா ஜித்தன் என பெயர் வாங்கிவிட்டார்.

இந்த நிலையில் மீண்டும் இடியட் என்கிற ஹாரர் படத்தை இயக்கியுள்ளார் ராம்பாலா. இதிலும் பேய்களை பதறவைக்கும் ஹீரோவாக நடித்துள்ளார் நடிகர் மிர்ச்சி சிவா. கதாநாயகியாக நிக்கிகல்ராணி நடித்துள்ள இந்த படத்தில் இன்னும் கலகலப்பை கூட்டும் விதமாக ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, சிங்கமுத்து, மயில்சாமி என ஒரு நகைச்சுவை பட்டாளமே நடித்து இருக்கின்றனர்.

வரும் ஏப்ரல்-1ஆம் தேதி இந்த படம் ரிலீசாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த படத்திற்கு விக்ரம் செல்வா என்பவர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Most Popular

Recent Comments