2020ம் ஆண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் தாமதமாக கொரோனா நோய் தொற்று காரணமாக பலத்த பாதுகாப்புகளுடன் நடத்தப்பட்டது.
இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்துக்கொண்டனர். அவர்களில் 12 பேர் எவிக்ஷனில் மக்களால் வெளியேற்றப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு கேபிரில்லா ரூ.5 லட்சம் பணத்துடன் வெளியேறினார். மீதமிருந்த 5 போட்டியாளர்கள் ஃபைனல் லிஸ்டிற்கு சென்றனர்.
இந்நிலையில் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு பெற்ற நடிகர் ஆரி பிக்பாஸ் வெற்றியாளராக 11.6 கோடி வாக்குகள் வித்தியாசத்தில் டைட்டில் வென்றார்.
அதனை தொடர்ந்து 4 கோடி வித்தியாசத்தில் பாலா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தது போலவே ஆரி டைட்டில் வென்றிருப்பது எல்லோருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இக்கட்டான சூழ்நிலையிலும், ஒவ்வொரு எவிக்ஷனிலும் காப்பாற்றப்பட்ட முதல் போட்டியாளர் ஆரி தான். மிகவும் நேர்மையான , தனித்துவமான , பொய் கலக்காத உண்மையான குணாதிசியங்கள், பயப்படாமல் தனது கருத்தை முன் வைப்பது என பல நற்குணங்கள் கொண்ட ஆரி அந்த வீட்டில் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டாலும் அது அத்தனையும் மீறி நேற்று (ஜனவரி 17) ஜெயித்துள்ளார். மீடியா குரூப்பிஸம் அதிகம் கொண்ட பிக்பாஸ் வீட்டில் மக்கள் மனதை வென்ற நேர்மையான போட்டியாளரான ஆரி டைட்டிலை வெல்ல 200% தகுதியானவர் என்பதால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வாழ்த்துக்கள் ஆரி !!