ஓய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டெர்டைன்மெண்ட் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் தமிழில் முன்னணி நடிகரான தனுஷை வைத்து படம் இயக்கவிருக்கிறார்.
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கவிருக்கிறார். கேங்ஸ்டெர் திரில்லர் படமான இது முழுக்க முழுக்க யூகேவில் (UK) படமாக்கபட திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் இருந்து இந்த படத்தின் படபிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படத்தின் தலைப்பு விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.
இந்த படத்தை சஷிகாந்த் மற்றும் சக்ரவத்தி ராமச்சந்திரா தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். ஒளிப்பதிவாளராக ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, எடிட்டிங்கிற்கு விவேக் ஹர்ஷன் ஒப்பந்தமாகியுள்ளனர்.