இந்தியாவின் மிகப்பெரிய அதிரடி திரைப்படமான சாஹோ திரைப்படத்தை இயக்குபவர் சுஜீத் தற்போது இந்த படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளிவருகிறது .
பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸ் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் சாஹோ. இந்த இடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட பட உள்ளது. இந்த படத்தின் டீஸர் அண்மையில் வெளிவந்து ரசிகர்களின் பேர் ஆதரவை பெற்றது.
இதை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் இந்த படத்தின் கதாநாயகனான பிரபாஸ் அவரது பக்கத்தில், இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அந்த பக்கத்தில், ” ஹே டார்லிங்ஸ்… சாஹாவின் பிரஸ்ட் சிங்கிள் விரைவில் வெளி வர உள்ளது” என பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பாடல் ” காதல் சைக்கோ ” என தமிழில் வர உள்ளது.