HomeNewsஓ பேபி படத்திற்காக சமந்தாவிற்கு கட்-அவுட்!!

ஓ பேபி படத்திற்காக சமந்தாவிற்கு கட்-அவுட்!!

‘பாணா காத்தாடி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. பின்னர் இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் நிறைய வெற்றி படங்களை கொடுத்து வந்தார். இவர் நாக அர்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் அண்மையில் இவரது கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து தெலுங்கில் ‘மஜ்லி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நிறைய வரவேற்பை பெற்றுள்ளது.

சமந்தா இந்த படத்தை தொடர்ந்து தற்போது ‘ஓ பேபி’ என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் இந்த படத்தில் முன்னணி நடிகை லட்சுமியுடன் இணைத்து நடித்துள்ளார். இந்த படம்
இந்த வார இறுதியில் ஜூலை 5-ம் தேதி திரைக்கு வருகிறது பி .வி .நந்தினி ரெட்டி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


சமந்தா இந்த படம் வெற்றிபெற அண்மையில் திருப்பதி சென்று வந்தார், இதை தொடர்ந்து இவரது ரசிகர் ஒருவர் அண்மையில் அவரது படம் வெளியிடும் தியேட்டர் ஒன்றில் மிக பெரிய கட்-அவுட் ஒன்று சமந்தாவிற்கு வைக்கப்பட்டதை இணையதளத்தில் வெளியிட்டார். இடை சமந்தா அவர்கள் ரீ- டுவீட் செய்துள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments