V4UMEDIA
HomeNewsKollywoodரஜினி பட பாடல் வரியில் லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து உருவாகும் படம்

ரஜினி பட பாடல் வரியில் லேடீஸ் ஹாஸ்டலை மையமாக வைத்து உருவாகும் படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படங்களின் டைட்டில்களை இளம் முன்னணி ஹீரோக்கள் பலரும் எப்படியாவது பெற்று தங்கள் படத்திற்கு வைத்துவிட வேண்டும் என இப்போது வரை செயல்படுத்தி வருகின்றனர். அப்படி அவரது பட டைட்டில்கள் கிடைக்காதவர்கள் அவர் நடித்த படங்களின் பாடல் வரிகளை அல்லது அவர் பேசிய பஞ்ச் வசனங்களின் வார்த்தைகளை தங்களது படத்திற்கு டைட்டிலாக வைத்து அதன் மூலம் ரசிகர்களிடம் தங்களது படத்தை விளம்பரப்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்திய வரவாக ரா ரா சரசுக்கு ரா ரா என்கிற புதிய படம் உருவாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற தெலுங்கு பாடலான ரா ரா சரசுக்கு ரா ரா என்கிற பாடலின் முதல் வரிகளையே படத்தின் டைட்டிலாக மாற்றி விட்டனர்

இந்தப்படத்தை கேஷவ் தெபுர்.என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்திக், காயத்ரி பட்டேல்  , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர்.

லேடீஸ் ஹாஸ்டலுக்குள்  நுழைந்த சில வாலிபர்கள் ஒரு க்ரைமுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் .அதிலிருந்து அவர்கள்  வெளிவந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் ஒன்லைன்.

அதற்கிடையே நடக்கும் பரபரப்பான விறுவிறுப்பான கிளுகிளுப்பான சம்பவங்கள் தான் கதை செல்லும் பாதை. க்ரைம், ஆக்சன், ஹாரர் அனைத்தும் நிரம்பிய ஒரு கதையாக இது இருக்கும்  9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Most Popular

Recent Comments