HomeNewsKollywoodலூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது

லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது

மலையாளத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற திரைப்படம் வெளியானது. கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட நடிகர் பிரித்விராஜ் இந்த படத்தின் மூலம் முதன்முதலாக தன்னை ஒரு வெற்றிகரமான இயக்குனராகவும் அடையாளப்படுத்திக் கொண்டார்.

அதுவரை 100 கோடி மட்டுமே வசூல் பார்த்திருந்த மலையாள சினிமாவை கிட்டத்தட்ட 200 கோடியை நோக்கி இந்த படத்தின் மூலம் அழைத்துச் சென்றனர் மோகன்லாலும் பிரித்விராஜும்.

அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் எம்புரான்  என்கிற பெயரில் உருவாகும் என கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் சொன்னபடியே தற்போது இந்த படத்தில் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பை துவங்கிவிட்டார் பிரித்விராஜ்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் துவங்கியுள்ளது இந்த படத்தை பிரபல லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. முதல் பாகத்தில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த இரண்டாம் பாகத்தில் யார் யார் நடிக்கின்றனர் என்கிற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments