தமிழ் ரசிகர்களுக்கு நான் ஈ என்கிற படம் மூலம் ரொம்பவே அறிமுகமானவர் நடிகர் நானி. தொடர்ந்து இவர் தெலுங்கில் நடித்து வரும் வெற்றி படங்கள் அனைத்தும் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரவேற்பை வெற்றி வருகின்றன. இந்த நிலையில் தற்போது நானி நடிப்பில் ஹாய் நான்னா என்கிற படம் தெலுங்கில் உருவாகி வருகிறது.
அப்பா மகளின் அழகான உணர்ச்சிகரமான பயணத்தை விவரிக்கும் விதமாக உருவாகி உள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஷௌர்யுவ் இயக்கியுள்ளார் நானியின் மகளாக கியாரா கண்ணா நடிக்கிறார்.
முதல் பாடலான ‘நிழலியே’ நானி மற்றும் மிருணால் தாக்கூர் ஜோடிக்கு இடையேயான அருமையான கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி ‘ஹாய் நான்னா’ திரைப்படத்தின் இனிமையான இசைப் பயணத்தை தொடங்கி வைத்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டின் ஒரு பகுதியாக, இரண்டாம் பாடலான ‘கண்ணாடி கண்ணாடி’-யை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று வெளியிட்டார்.
“அப்பா-மகள் உறவு என்பது தெய்வீகமானது. நானி நடிக்கும் ‘hi நான்னா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘கண்ணாடி கண்ணாடி’ பாடல் அனைத்து தந்தைகள் மற்றும் மகள்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்