லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்கிற வெற்றி படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் இந்த படத்தின் வெளியிட்டு உரிமைகள் ஒவ்வொன்றாக விற்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் லியோ படத்தின் இங்கிலாந்து வெளியீட்டு உரிமையை அஹிம்சா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்பதிவையும் சமீபத்தில் ஆரம்பித்து அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டன.
இந்த நிலையில் லியோ படத்தை லண்டனில் வெளியிடுவது குறித்த ஒரு அப்டேட் தகவலை இந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. பொதுவாகவே லண்டனில் பெரும்பாலும் வன்முறை காட்சிகள் அதிகம் உள்ள படங்களுக்கு குடும்பத்துடன் பார்க்கும் விதமான சென்சார் சான்றிதழ் கிடைக்காது. அதேசமயம் விஜய் படத்தை குடும்பத்துடன் குழந்தைகளுடன் தான் அனைவரும் சென்று ரசிப்பார்கள்.
அதனால் முதலில் விஜய் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களும் பார்க்கும் விதமாக முதல் நாளிலிருந்து குறைந்தபட்சம் ஒரு ஒரு வாரத்திற்காவது திரையிடுவது என்றும் அதன்பிறகு 12ஏ என்கிற சான்றிதழ் பெற்று குடும்பத்துடன் குழந்தைகளுடன் அனைவரும் பார்க்கும் விதமாக பிரெண்ட்லி வெர்சனை வெளியிடப் போவதாகவும் அறிவித்துள்ளது அந்த நிறுவனம்.