மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றியை கொடுத்த வெங்கட் பிரபு அதற்கடுத்து ரகசியத்தன் யாவை வைத்து இயக்கிய கஸ்டடி படத்தில் அப்படி ஒரு வெற்றியை பெற தவறினார் ஆனாலும் அடுத்ததாக விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் தளபதி 68 படத்தை இயக்கும் வாய்ப்பு அவரது கைகளுக்கு பொக்கிஷமாக தேடி வந்துள்ளது கடந்த 12 வருடங்களுக்கு முன்பே அஜித்தை வைத்து அவர் மங்காத்தா என்கிற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த போதே அவர் அடுத்ததாக விஜயை வைத்து ஒரு படம் இயக்குனர் என்கிற எதிர்பார்ப்பு உருவாகுது ஆனால் அது நிறைவேறுவதற்கு கிட்டத்தட்ட 12 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்றும் அதற்கான அவரது உருவத்தோற்றத்தை கிராபிக்ஸ் முறையில் லேட்டஸ்ட் டெக்னாலஜியை பயன்படுத்தி மாற்றுவதற்காக தற்போது அமெரிக்காவிற்கு சென்று உள்ளார்கள் என்பதும் ஏற்கனவே வெளியான செய்தி இந்த படம் சயின்ஸ் பிக்சன் படமாக உருவாக உள்ளது தற்போது வெங்கட் பிரபு இதுகுறித்து இரண்டு புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வெல்கம் டு தி ஃபியூச்சர் என இது பற்றி அவர் கூறியுள்ளது இந்த படம் நிச்சயமாக ஒரு சயின்ஸ் பிக்சன் படம் தான் என்பதை உறுதி செய்துள்ளது அது மட்டும் அல்ல ஒரு பேட்டியில் அவர் கூறும் போது விஜய் ஏலியன்கள் கடத்தி சென்றால் எப்படி இருக்கும் அங்கே விஜய் எப்படி மாஸ் காட்டுவார் என நினைத்துப் பாருங்கள் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது