சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த 17 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்த ஜோதிகா மிக அற்புதமான நடிப்பை வழங்கி ரசிகர்களை பிரமிக்க வைத்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 உருவாகியுள்ளது. சூப்பர் ஸ்டாருக்கு பதிலாக அவரது சிஷ்யர் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணவத் நடித்துள்ளார்.
மரகதமணி இசையமைக்கும் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குனர் பி.வாசுவே இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த வேட்டையன் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் கதாநாயகியாக சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ள கங்கனா ரணவத்தின் கதாபாத்திர போஸ்டர் குறித்த வீடியோ ஒன்று தயாரிப்பு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரில் கங்கனா ரணவத்தை பார்க்கும்போது நிச்சயமாக சந்திரமுகி கதாபாத்திரத்திற்கு ஜோதிகாவை போல இவரும் வெகு பொருத்தமாக இருப்பார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. இந்த படம் வரும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது