V4UMEDIA
HomeNewsKollywoodஅதிரடி பாடல்கள் மத்தியில் ரிலாக்ஸ் ஆக வெளியான ஜெயிலர் ‘ரத்தமாரே’ பாடல்

அதிரடி பாடல்கள் மத்தியில் ரிலாக்ஸ் ஆக வெளியான ஜெயிலர் ‘ரத்தமாரே’ பாடல்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். தொடர்ந்து நெல்சன் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத் அவருடன் நான்காவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.

அதேபோல பேட்ட, தர்பார் ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து உள்ளார் அனிருத். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து வெளியான முதல் பாடலான காவாலா பாடலே உலகெங்கிலும் ஒரு மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தி விட்டது.

குறைந்த நாட்களிலேயே 100 மில்லியன் பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்ட பாடல் என்கிற சாதனையை அந்த பாடல் உருவாக்கி விட்டது. அதைத் தொடர்ந்து வெளியான ஹுக்கும் மற்றும் ஜூஜூபி ஆகிய பாடல்களும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்த பாடல்கள் எல்லாமே அதிரடி பாடல்களாக அமைந்த நிலையில் தற்போது நான்காவது பாடலான ரத்தமாரே என்கிற பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.

குடும்ப உறவுகளின் அன்பு, பாசம், சந்தோசம் ஆகியவற்றை மையப்படுத்தி இந்த பாடல் ஒரு மெலடியாக உருவாகி உள்ளது. இந்த பாடல்களையும் ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டாடி வருகிறார்கள்.

Most Popular

Recent Comments