V4UMEDIA
HomeNewsKollywoodப்ரோ டாடி ரீமேக்கில் சிரஞ்சீவி – திரிஷா

ப்ரோ டாடி ரீமேக்கில் சிரஞ்சீவி – திரிஷா

தெலுங்கு திரையுலகில் நடிகர் சிரஞ்சீவி தற்போது தனது இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். வருடத்திற்கு இரண்டு படங்களாவது வெளியாகும் விதமாக பார்த்துக் கொள்கிறார். அதில் ஒரு படம் நேரடி கதையாகவும் இன்னொரு படம் தமிழ் மற்றும் மலையாள மொழியில் ஹிட்டான படத்தின் ரீமேக் ஆகவும் இருக்கும் விதமாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் ரீ என்ட்ரி கொடுத்ததே விஜய்யின் கத்தி பட ரீமேக் மூலமாகத்தான்.

இதைத்தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் ஹிட்டான லூசிபர் படத்தை காட்பாதர் என்கிற பெயரில் ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் டீசண்டான வெற்றியை பெற்றது.

அதைத்தொடர்ந்து அஜித் நடித்த வேதாளம் படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் போலா சங்கர் என்கிற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சிரஞ்சீவி.

மலையாளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லாலும் பிரித்திவிராஜும் இணைந்து நடித்த ப்ரோ டாடி என்கிற காமெடி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் தான் நடிக்க உள்ளார் சிரஞ்சீவி.

இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக, மலையாளத்தில் மீனா நடித்த கதாபாத்திரத்தில் த்ரிஷா நடிக்க இருக்கிறார். பிரித்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் சர்வானந்தும் கல்யாணி பிரியதர்ஷன் நடித்த கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலாவும் நடிக்க இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தை கல்யாண் கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

Most Popular

Recent Comments