விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின். அதைத் தொடர்ந்து சினிமாவில் ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார் கவின்.
இதைத் தொடர்ந்து சில பட வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது நடிப்பில் கணேஷ்பாபு என்பவர் இயக்கத்தில் வெளியான டாடா என்கிற திரைப்படம் அவருக்கு முதல் வெற்றி படமாக அமைந்தது.
இந்த நிலையில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு பிசியான நடிகராக மாறியுள்ளார் நடிகர் கவின். இந்த நிலையில் சூட்டோடு சூடாக அடுத்து திருமண பந்தத்திலும் இணைய உள்ளார் கவின். இது குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இவர் திருமணம் செய்து கொள்ளப் போவது யார் தெரியுமா ? தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா என்பவரை காதலித்து வந்தார் கவின். மிக ரகசியமான இவர்களின் காதல் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் திருமணக் கட்டத்தை எட்டியுள்ளது. இவர்களின் திருமணம் அனைவரின் ஆசியுடன் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.
நடிகர் கவினுக்கென தனி ரசிகர் வட்டம் மட்டுமல்லாமல், தயாரிப்பு மற்றும் விநியோக வட்டாரத்திலும் இவரது மதிப்பு உயர்ந்துள்ளது. தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில், இசையமைப்பாளர் ராக் ஸ்டார் அனிருத் இசையில், ஒரு ரொமான்ஸ் படத்தில் நடித்துவருகிறார் கவின். இப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெருமளவில் உயர்ந்துள்ளது.