V4UMEDIA
HomeNewsKollywood24 மணி நேரத்தில் 46 மில்லியன் ; ஜவான் பட முதல் பாடல் சாதனை

24 மணி நேரத்தில் 46 மில்லியன் ; ஜவான் பட முதல் பாடல் சாதனை

பாலிவுட்டின் சூப்பர் நட்சத்திரமான ஷாருக்கான் இந்த வருடத்தில் ஏற்கனவே பதான் என்கிற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட்டார். கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் அந்த படம் வசூலித்து மாபெரும் சாதனை செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக ஷாருக்கான் நடிப்பில் வெளியாகும் விதமாக உருவாகி வரும் படம் ஜவான்.

இந்த படத்தை இயக்குனர் அட்லீ இயக்குகிறார் என்பதுடன் முதன்முறையாக இதன் மூலம் பாலிவுட்டிலும் அவர் அடி எடுத்து வைத்துள்ளார் என்பது தான் இந்த படத்திற்கான சிறப்பு. இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த படத்தில் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு என முக்கியமான கலைஞர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்துள்ளதன் மூலம் மூலம் முதன்முறையாக தானும் பாலிவுட்டில் நுழைந்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத்.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டின் YouTube தளத்தின் மிகப்பெரிய சாதனை பாடலாக ‘ஜிந்தா பந்தா,’ ‘வந்த எடம்,’ மற்றும் ‘தும்மே துளிபெலா’ பாடல்கள் சாதனை படைத்துள்ளது ஒரே படத்தின் மூன்று மொழி வீடியோக்களும் YouTube ல் முதல் 3 இடங்களில் ஆதிக்கம் செலுத்தி உலகளவில் சாதனை படைத்துள்ளது, உண்மையில் இது இந்திய அளவில் மிகப்பெரும் சாதனையாகும்.

குறிப்பாக ஜவான், முதல் பாடல் ஹிந்தியில் ‘ஜிந்தா பந்தா’, தமிழில் ‘வந்த எடம்’ மற்றும் தெலுங்கில் ‘தும்மே துலிபேலா’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது ஒரு மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளது. வெளியான 24 மணி நேரத்திற்குள், இந்த பாடல்கள் டிஜிட்டல் உலகத்தை புயல் போல் தாக்கியது, YouTube ல் 46 மில்லியன் பார்வைகளை குவித்து, 2023 இல் மேடையில் மிகப்பெரிய சாதனைப் பாடலாக மாறியுள்ளது

Most Popular

Recent Comments