பிரபல இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான எம்எஸ் தோனி சினிமா தயாரிப்பிலும் கால் பதித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர் அவர் ஒரு தமிழ்நாட்டுக்காரர் ஆகவே மாறிவிட்டார். அதனால் தான் தயாரிக்கும் முதல் படத்தையும் தமிழிலேயே தயாருக்கிறார்.
எல்ஜிஎம் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாக நடிக்க, லவ் டுடே புகழ் இவானா கதாநாயகியாக நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் நதியா மற்றும் யோகிபாபு நடித்துள்ளனர். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்கி உள்ளதுடன் இந்த படத்திற்கு அவரே இசையமைத்துள்ளார்.
கடத்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் தோனி தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து தற்போதும் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.