V4UMEDIA
HomeNewsKollywoodஎஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விஷால்

எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய விஷால்

தமிழ் சினிமாவில் வாலி என்கிற படத்தில் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்ஜே சூர்யா. தொடர்ந்து விஜய்யை வைத்து குஷி என்கிற படத்தையும் கொடுத்தார். ஆனால் அவர் சினிமாவிற்கு நடிப்பதற்காக வந்தவர். அதனால் மனதில் இருக்கும் நடிப்பு ஆசையை நிறைவேற்றிக் கொள்ளும் விதமாக தொடர்ந்து படங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.

அதன்பிறகு டைரக்ஷனை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு முழுநேர நடிகராக மாறி தற்போது பல படங்களின் ஹீரோவாகவும் வில்லனாகவும் மாறி மாறி நடித்து வருகிறார். குறிப்பாக வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு படத்தில் நடித்த பிறகு எஸ்ஜே சூர்யாவின் மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது.

அவர் இருந்தாலே அந்த படத்திற்கு தாராளமாக டிக்கெட் போடலாம் என்கிற அளவிற்கு ரசிகர்களின் மனதில் நம்பிக்கையை உருவாக்கி விட்டார். இந்த நிலையில் தற்போது ஒரு பக்கம் ராகவா லாரன்ஸுக்கு வில்லனாக ஜிகர்தண்டா டபுளக்ஸ் படத்திலும், இன்னொரு பக்கம் விஷாலுக்கு வில்லனாக மார்க் ஆண்டனி படத்திலும் நடித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.

இந்த படங்கள் அடுத்தடுத்து வழியாக இருக்கின்றன. இதில் மார்க் ஆண்டனி படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது.

இந்தநிலையில் எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளை விஷால் உள்ளிட்ட மார்க் ஆண்டனி படக்குழுவினர் வித்தியாசமான முறையில் கொண்டாடியுள்ளனர். இந்த படத்தில் படப்பிடிப்புக்காக பயன்படுத்தப்பட்ட டம்மி துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க எஸ்ஜே சூர்யாவின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள் விஷால் உள்ளிட்ட படக்குழுவினர்.

Most Popular

Recent Comments