V4UMEDIA
HomeNewsKollywoodஜெயிலர் இசை வெளியீட்டு விழா எப்போது ?

ஜெயிலர் இசை வெளியீட்டு விழா எப்போது ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன் என மற்ற மொழி திரையுலகத்தைச் சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

மற்றும் தமன்னா ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி என நம்ம ஊர் பிரபலங்களும் ஏராளமான இதில் நடித்துள்ளனர். சமீப நாட்களில் இந்த படத்திலிருந்து அனிருத் இசையில் வெளியான காவாலா என்கிற பாடலும் மற்றும் ஹுக்கும் என்கிற பாடலும் லிரிக் வீடியோவாக வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளன.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் வரும் ஜூலை-28ல் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இது குறித்து தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தயாராகுங்கள் என்று குறிப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினியின் முந்தைய படங்களின் இசை வெளியீட்டு நிகழ்வுகளை ஒரு சிறிய வீடியோவாக பதிவிட்டுள்ளது.

அந்த வகையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாராகிவிட்டது ஜூலை 28ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments