இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு நடிகர் விஜய்யின் தந்தையாக மட்டுமே, அல்லது சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள ஒரு நடிகராக மட்டுமே அறியப்படுபவர் பிரபல இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், ஆனால் 80, 90களில் இவர் படங்கள் செய்த சாதனைகள் இன்றைய இளைஞர்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. பல நட்சத்திரங்களின் உயர்வுக்கு காரணமாக இருந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இந்த வயதிலும் கூட படங்களை இயக்கியும் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில் இன்று புத்தாண்டு தினத்தை சினிமா பத்திரிக்கை அவர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர். இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு தலா 10 கிலோ அரிசி பையை வழங்கி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்த ஏ சந்திரசேகர் நான் இன்னும் இளமை துடிப்புடன் இருக்கும் ரகசியம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “என்னைப் பொறுத்தவரை எனது வயதைக் கூறுவதில் நான் தயக்கம் காட்டியதே கிடையாது. எனக்கு 82 வயதுதான் ஆகிறது. என்னுடைய 36 வது வயதிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து ஜந்து நிமிடம் கண்ணை மூடிக்கொண்டு கடவுளை நினைத்து தியானம் செய்து வருகிறேன். அந்த எனர்ஜி தான் நான் உற்சாகமாக இருப்பதற்கு காரணம்.
நீங்கள் அனைவரும் செய்து பாருங்கள் நீங்களே உணர்வீர்கள். அதுவே பத்து, பதினைந்து நாட்கள் ஆனதும் பிரச்சினைகளை மறந்து ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். நம்மை சந்தோஷப்படுத்தக் கூடிய கருவி நமது மூச்சுக்காற்று, அந்த மூச்சுக் காற்று உள்ளே செல்வதை நீங்கள் உணரும் போது சந்தோஷம் தானக வரும். இதை அனைவரும் செய்து பாருங்கள் என்றார்