எல்கேஜி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி. அதன்பிறகு மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் நடித்து தொடர் வெற்றி பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது அடுத்த படமாக சிங்கப்பூர் சலூன் படம் உருவாகி வருகிறது. இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் கோகுல் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
வீட்ல விசேஷம் படத்தை தொடர்ந்து மீண்டு ஆர்ஜே பாலாஜியுடன் இந்த படத்தில் சத்யராஜ் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். மேலும் லால் தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
தொடர்ந்து ஆர்ஜே பாலாஜிக்கு பக்கபலமாக இருந்து அவரது படங்களை தயாரித்து வரும் ஐசரி கணேஷ், இந்தப்படத்தை தயாரித்துள்ளார். ஒரு முடிதிருத்தும் தொழிலாளியின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பை தற்போது நிறைவு செய்துள்ளார் ஆர்ஜே பாலாஜி.