HomeNewsKollywoodவரலட்சுமி நடிக்கும் வி-3 படம் எதை குறிக்கிறது ?

வரலட்சுமி நடிக்கும் வி-3 படம் எதை குறிக்கிறது ?

தமிழ் சினிமாவில் தற்போது மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களிலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து வரும் கதாநாயகிகள் யாரென்றால் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் வரலட்சுமி சரத்குமார் இருவரும் தான் முன்னிலை வகிக்கிறார்கள்.

அந்த வகையில் வரலட்சுமி நடிப்பில் ஏற்கனவே இந்த வருடத்தில் ஐந்து படங்கள் வெளியாகிவிட்டன சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து இருந்தார் வரலட்சுமி. அதைத் தொடர்ந்து அவர் நடித்துள்ள சபரி திரைப்படம் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில்தான் அந்த படத்திற்காக டப்பிங் பணிகளை நிறைவு செய்தார் வரலட்சுமி.

இது ஒரு பக்கமிருக்க தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் கொன்றால் பாவம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் எளிய கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் வரலட்சுமி

இந்த நிலையில் அமுதவாணன் என்பவர் இயக்கத்தில் உருவாகிவரும் வி3 என்கிற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் வரலட்சுமி. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

விந்தியா – விக்டிம் – வெர்டிக்ட் என்கிற மூன்று வார்த்தைகளை குறிக்கும் விதமாக வி-3 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. திரில்லர் கதையாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அலெக்ஸ் ஜெபஸ்டின் என்பவர் இசையமைக்கிறார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments