V4UMEDIA
HomeNewsKollywoodமுத்தையா ஆர்யா கூட்டணியில் உருவாகும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

முத்தையா ஆர்யா கூட்டணியில் உருவாகும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்

கிராமத்து பின்னணியில், அங்குள்ள மக்களின் வாழ்வியல் கதைகளை மட்டுமே தொடர்ந்து படமாக்கி வருபவர் இயக்குனர் முத்தையா. அவர் சாதிரீதியாக படம் எடுக்கிறார் என்று சிலர் சொன்னாலும், எந்த ஒரு சாதியையும் எதிர்க்கும் விதமாக படம் எடுக்காமல் குறிப்பிட்ட ஒரு பிரிவினருக்குள்ளேயே, அவர்கள் உறவுகளுக்குல்லேயே நடக்கும் மோதல்களை மட்டுமே படமாக்கி வருகிறார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார்த்தியை வைத்து அவர் இயக்கிய விருமன் படம்கூட அப்படி தந்தை-மகன் இருவருக்கும் இடையேயான மோதலை பற்றிய படமாக உருவாகி இருந்தது. மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் அமைந்தது.

இந்த நிலையில் தனது அடுத்த படத்தை துவங்கி விட்டார் முத்தையா. இந்த படத்திற்கு காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் முதன்முதலாக இயக்குனர் முத்தையாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார் நடிகர் ஆர்யா. கதாநாயகியாக வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த சித்தி இத்னானி நடிக்கிறார். ஆர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

Most Popular

Recent Comments