கடந்த சில மாதங்களுக்கு முன் தெலுங்கில் அல்லு arjun நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் புஷ்பா. சுகுமார் இயக்கி தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இந்தப்படத்தில் கதாநாயகி ராஷ்மிகா ஆடிய சாமி சாமி என்கிற பாடலும் சமந்தா நடனமாடிய ஓ அண்டாவா என்கிற பாடலும் இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கும் விதமாக சூப்பர்ஹிட் பாடல்களாக மாறின.
இதில் ஓ அண்டாவா பாடலை சமந்தா பாடுவது போலவே ஏற்ற இறக்கத்துடன், கொஞ்சம் கிறக்கத்துடன் கூடிய குரலில் தெலுங்கில் பாடியவர் இந்திரவதி சவுகான். இவர் தற்போது தமிழிலும் என்ஜாய் என்கிற படம் மூலமாக ரசிகர்கள் என்ஜாய் பண்ணும் விதமான பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
அறிமுக இயக்குனர் பெருமாள் காசி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் இடம்பெறும் சங்கு சக்கர கண்ணு என்கிற பாடலை பாடியுள்ளார் இந்திராவதி சவுகான்.
விவேகா எழுதியுள்ள இந்தப்பாடலுக்கு கே.எம்.ரயான் இசையமைத்துள்ளார். தமிழில் பாடுவத்ஜற்கு தனக்கு மிகவும் விருப்பம் என்றும் தொடர்ந்து தமிழில் பாட வாய்ப்புகள் வருவதாகவும் கூறியுள்ளார் இந்திராவதி சவுகான்.