கன்னடத்தில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ஹரிப்ரியா.. தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன் சேரன் கதாநாயகனாக நடித்த முரண் படத்திலும் பின்னர் வல்லக்கோட்டை படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நான் மிருகமாய் மாற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பத்து வருட இடைவெளிக்குப்பின் மீண்டும் தமிழ் சினிமாவி ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் ஹரிப்ரியா. தவிர கன்னடம் மற்றும் தெலுங்கிலும் பிசியாக நடித்து வருகிறார். இந்தநிலையில் இவருக்கும் கன்னட நடிகர் வசிஷ்டா சிம்ஹா என்பவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.