சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 20 வருடங்களுக்கு முன்பு அவர் நடிப்பில் வெளியான பாபா திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் டிஜிட்டலில் வெளியாகி உள்ளது. இப்போது வெளியாகும் ரஜினியின் புதிய படத்திற்கு என்ன வரவேற்பு ரசிகர்கள் கொடுப்பார்களோ அதே அளவிற்கு பாபா படத்திற்கும் தற்போது கிடைத்து வருகிறது.


இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் பாபா படத்தின் ரீ ரிலீசை ஆர்வமுடன் வரவேற்றுள்ளனர். குறிப்பாக தியேட்டர்களில் தங்கள் மிகப்பெரிய நெட்வொர்க்கை கிளை பரப்பியுள்ள பிவிஆர் சினிமாஸ் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இந்த வருட பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளது.


அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த பாபா, சிவாஜி, 2.O மற்றும் தர்பார் ஆகிய நான்கு படங்களை ஒரு வார காலத்திற்கு தினசரி திரையிட்டு ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த உள்ளது.


இதற்கான துவக்க விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மற்றும் கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.