V4UMEDIA
HomeNewsKollywoodபஹத் பாசிலின் மலையாள படத்தை தயாரிக்கும் சூப்பர்குட் பிலிம்ஸ்

பஹத் பாசிலின் மலையாள படத்தை தயாரிக்கும் சூப்பர்குட் பிலிம்ஸ்

தமிழ் சினிமாவில் கடந்த முப்பது வருடங்களில் தயாரிப்பு துறையில் கோலோச்சிய நிறுவனங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். அதில் ஒன்றுதான் ஆர்பி சவுத்ரியின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனம். கடந்த 30 வருடங்களாக தென்னிந்தியத் திரையுலகில் குறிப்பாக, தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை வைத்துள்ள இந்த நிறுவனத்தின் மூலமாக பல திறமையான இயக்குனர்கள் அறிமுகமாகியுள்ளனர். பல நடிகர்களுக்கு இந்த நிறுவனம் பாதை அமைத்துக் கொடுத்துள்ளது.

கடந்த பத்து வருடங்களாக தயாரிப்பு சூழல் மாறியுள்ள நிலையில் தயாரிப்பிலிருந்தது சற்றே ஒதுங்கி செலக்டிவ் ஆக மட்டுமே படங்களை தயாரித்து வரும் சூப்பர் குட் பிலிம்ஸ் இதுவரை தொண்ணூற்று ஐந்து படங்களை தயாரித்துள்ளது .

தற்போது 96 வது படமாக மலையாளத்தில் பஹத் பாசில் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது இந்த நிறுவனம். இந்தப்படத்திற்கு ஹனுமன் கியர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சுதீப் சங்கர் என்பவர் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இந்த படத்திற்கு டாப் கியர் என ஆங்கிலத்தில் ஒரு டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பிற்கான டைட்டிலா என்பது கூடிய விரைவில் தெரிந்துவிடும்.

Most Popular

Recent Comments