V4UMEDIA
HomeNewsKollywoodஇக்கட்டான சூழலில் சமந்தா ; விறுவிறுப்பான யசோதா டீசர்

இக்கட்டான சூழலில் சமந்தா ; விறுவிறுப்பான யசோதா டீசர்

நடிகை சமந்தா இப்போதெல்லாம் ஒருபக்கம் ஹீரோவுடன் டூயட் பாடுகிறார். இன்னொரு பக்கம் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடுகிறார். இன்னொரு பக்கம் கதையை தாங்கிப்பிடிக்கும் கதையின் நாயகியாகவும் நடித்துவருகிறார். இப்படி ஒரு வட்டத்திற்குள் தன்னைச் சுருக்கி கொள்ளாமல் பல்வேறு பரிமாணங்கள் காட்டும் சமந்தாவின் அடுத்த படமாக வெளியாக இருக்கிறது யசோதா.

தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்த படம் இந்தியா படமாக வெளியாகும் என்று தெரிகிறது. இந்த படத்தை இயக்குநர்கள் ஹரி-ஹரிஷ் கூட்டணி  இயக்கியுள்ளார் இந்த படத்தில் இன்னும் ஒரு கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடிக்க கதாநாயகனாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் நடித்துள்ளார்.

ராவ் ரமேஷ், முரளி ஷர்மா, சம்பத் ராஜ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்விரைவில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது இந்த டீசரை பார்க்கும் போது சில விஷயங்களை புரிந்து கொள்ள முடிகிறது அதாவதுகுழப்பமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் சமந்தா சாப்பிட முடியாமல், தூங்க முடியாமல், உயிர் பிழைக்க போராடுவதை டீசர் காட்டுகிறது.

கர்ப்பிணிப் பெண்ணாக நடிக்கும் அவர், பெண் மருத்துவர் பரிந்துரைத்தும் பார்க்ககூடாத ஒன்றை பார்த்து விடுகிறார். அவரை சுற்றி என்ன தான் நடக்கிறது? அவர் ஏன் வாழப் போராடுகிறார்? அவர் எதை வெளிப்படுத்த பாடுபடுகிறார்? அதுதான் படத்தின் சுவாரஸ்ய  மர்மம் என்கிறார் தயாரிப்பாளர் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத்

Most Popular

Recent Comments