V4UMEDIA
HomeNewsKollywoodசாட் பூட் த்ரீ படத்திற்கு சியோல் திரைப்பட விழாவில் கிடைத்த கவுரவம்

சாட் பூட் த்ரீ படத்திற்கு சியோல் திரைப்பட விழாவில் கிடைத்த கவுரவம்

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். அந்த படத்தில் நடித்த பிரசன்னா, சினேகா இருவரும் நிஜ வாழ்க்கையிலும் இணைவதற்கு அச்சாரம் போட்டது அந்த படம்தான். அதை தொடர்ந்து மலையாளத்தில் மோகன்லால் வைத்து பெருச்சாளி என்கிற படத்தை இயக்கினார் அருண் வைத்தியநாதன்.

சில வருடங்களுக்கு முன் அர்ஜூன், பிரசன்னா நடிப்பில் நிபுணன் என்கிற படத்தையும் இயக்கினார். இந்த நிலையில் குழந்தைகளை மையப்படுத்தி சாட் பூட் த்ரீ என்ற படத்தை இயக்கியுள்ளார் அருண் வைத்தியநாதன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை சினேகா, வெங்கட் பிரபு, யோகிபாபு, ஆர்.எஸ். சிவாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

நான்கு குழந்தைகளுடன் ஒரு ‘கோல்டன் ரெட்ரீவர்’ நாய் ‘மேக்ஸ்’ நடித்துள்ளனர். கைலாஷ் ஹீத், சூப்பர் சிங்கர் ப்ரணிதி, வேதாந்த் மற்றும் ‘மாஸ்டர்’ புகழ் பூவையார் ஆகியோர் இந்த குடும்பப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்இந்த நிலையில் ஷாட் பூட் த்ரீ” ICAFF, சியோல், தென் கொரியாவில்  ஐ.சி.ஏ.எஃப். எஃப் திரைப்பட விழாவின் சிறந்த விருதை வென்றது

விழாக் குழுவினர், இயக்குனருக்கு எழுதிய  பாராட்டு மடலில் மிக அற்புதமான மற்றும் ஆரோக்கியமான கதையுடன் கூடிய திரைப்படம் என்றும் குழந்தைகள் மற்றும் நாய்களைப் பற்றிய இந்தியப் படத்தைப் பார்ப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது என்றும் படத்தின் கருப்பொருள் எங்கள் ICAFF திரைப்பட விழாவின் நோக்கம் மற்றும் குறிக்கோளை மனப்பூர்வமாக பூர்த்தி செய்தது. மேலும் இந்த பரிசை உங்களுக்கு வழங்குவது என்பது அனைத்து நடுவர்களாலும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. என்றும் குறிப்பிட்டுள்ளனர் விருது வழங்கும் விழா அக்டோபர் 7-9 தேதிகளில் நடைபெறும்

தென் கொரியா,  உலகின் ‘செல்லப்பிராணிகளின் தலைநகரம் ‘என்று சொன்னால் அது மிகையாகாது.  ஐ.சி,.ஏ. எஃப் .எஃப் (ICAFF) தென்கொரியாவில் துணை விலங்குகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் திரைப்பட திருவிழாவாகும். 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திரைப்பட விழாவில், முதன் முறை ஒரு இந்தியத் திரைப்படம் விருதை வென்றுள்ளது.

விலங்குகள் செல்லப்பிராணிகள் மட்டுமல்ல, இப்போது குடும்பம் அல்லது வாழ்க்கைத் துணையாகக் கருதப்படுகின்றன, எனவே இந்தத் திரைப்பட விழா செல்லப்பிராணிகள மேல் நாம் கொண்டுள்ள நட்பையும் அன்பையும் கொண்டாடுகிறது.

Most Popular

Recent Comments