V4UMEDIA
HomeNewsKollywood“மாமனிதன்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “ஏ ராசா” பாடல் வெளியீடு

“மாமனிதன்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “ஏ ராசா” பாடல் வெளியீடு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகி உள்ள படம் “மாமனிதன்”. நீண்டநாள் தயாரிப்பில் இருக்கும் இப்படத்திற்கு இளையராஜாவும், அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தில் இருந்து ஏற்கனவே ஒரு பாடல் வெளியாகி உள்ள நிலையில் இப்போது இரண்டாவது பாடலாக “ஏ ராசா” பாடலை வெளியிட்டுள்ளார்.

இந்த பாடல் பலவிதமான உணர்வுகளை ஒன்றாக வெளிபடுத்தும் பாடலாக, வாழ்வின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் பாடலாக, ஆத்ம திருப்தி தரும் பாடலாக, இந்த பொதுமுடக்க காலத்தில் நம் மனதிற்கு இனிமையை தரும் பாடலாக அமைந்துள்ளது. பா.விஜய்யின் பாடல் வரிகளில் யுவன் பாடி உள்ளார்.

இந்த பாடல் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, யுவன் அவர்கள் தனியாக தோன்றும் வீடியோ வடிவிலும் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மனதை ஆற்றுப்படுத்தும் அதே நேரம், கண்களுக்கும் இனிமை தரும் விருந்தாக, நம்பிக்கை தரும் மருந்தாக உள்ளது இப்பாடல்.

Most Popular

Recent Comments