V4UMEDIA
HomeNewsKollywoodVijaySethupathi's Laabam Trailer All Set To Release On August 22

VijaySethupathi’s Laabam Trailer All Set To Release On August 22

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் “லாபம்” . நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன்  சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்‌ஷனும் இணைந்து தயாரிக்கின்றன.  இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லாபம் படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் லாபம் படத்தின் முதல் ட்ரைலர் பற்றிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளனர். அத்துடன் விஜய் சேதுபதி மிரட்டலான லுக்கில் இருக்கும் போஸ்டர் ஒன்றும் வெளியாகியுள்ளது. லாபம் படத்தின் ட்ரைலர் வரும் ஆகஸ்ட் 22 அன்று மாலை 5 மணிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ரசிகர்கள் மத்தியில் இப்போதே ஆவலுடன் ட்ரைலரை எதிர்பார்த்து உள்ளனர்.

Most Popular

Recent Comments