‘தளபதி’ விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 09-ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான க்வ்ன் புரொடக்ஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!


‘தளபதி’ விஜயின் 69-ஆவது படமான ஜனநாயகன் திரைப்படத்தின் புதிய அப்டேட்டான படம் வெளியாகும் தேதி தயாரிப்பு தரப்பில் இருந்து வந்துள்ள நிலையில் ரசிகர்கள் சந்தோஷத்தின் உச்சத்தில் அதை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்துகொண்டு வருகின்றனர்.


H .வினோத் இயக்கத்தில் ‘தளபதி’யுடன் ஜோடியாக பூஜா ஹெக்டே, பாபி தியோல், ‘அஞ்சாதே’ நரேன், மமிதா பைஜூ, மோனிஷா பிளஸ்ஸி மற்றும் பலர் நடிக்கும் படமான ‘ஜனநாயகன்’ படத்தை திரையில் கண்டுகளிக்க பெரும் ரசிகர் கூட்டம் தயாராகிக் கொண்டிருக்கிறது.