Home News Kollywood ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டார் ‘இயக்குனர்’அட்லி!

‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலை வெளியிட்டார் ‘இயக்குனர்’அட்லி!

இயக்குனர் மற்றும் நடிகர் K.S.ரவிக்குமாரின் RK Celluloids நிறுவனத்தின் அடுத்த திரைப்படம் ‘ஹிட்லிஸ்ட்’ ஆகும்.இந்நிறுவனம் சார்பில் ஏற்கனவே ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’ மற்றும் ‘கூகுள் குட்டப்பா’ ஆகிய திரைப்படங்கள் வெளி வந்துள்ளன.

இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா கதாநாயகனாக அறிமுகம் ஆகும், இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர்கள் சூர்ய கதிர்-K.கார்த்திகேயன் இயக்கியுள்ளனர்.இந்த படத்தில் நடிகர் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் K.S.ரவிக்குமார், கௌதம் மேனன், சமுத்திரக்கனி,ஸ்மிரிதி வெங்கட்,ஐஸ்வர்யா தத்தா,அபி நக்ஷத்ரா,அபிநயா,சித்தாரா, முனீஸ்காந்த்,ரெடின் கிங்ஸ்லி,’கே.ஜி.எஃப்’ புகழ் ‘கருடா’ராமச்சந்திரா,’மைம்’கோபி மற்றும் அனுபமா குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தின் முன்னோட்டம் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இத்திரைப்படத்தின் ‘ஐ ஆம் தி டேஞ்ஜர்’ என்ற முதல் பாடலை நடிகர் சூர்யா அவர்கள் ஏற்கனவே வெளியிட்டார்.

வரும் 31-ஆம் தேதி வெளியாகவிருக்கும் ‘ஹிட் லிஸ்ட்’ திரைப்படத்தின் ‘கர்மா இஸ் பூமராங்’ என்ற இரண்டாவது பாடலை ‘மெர்சல்’,’ பிகிலை’த் தொடர்ந்து ‘ஜவான்’ எனும் மாபெரும் வெற்றித் திரைப்படத்தை அளித்து இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ‘இயக்குனர்’அட்லிஅட்லி வெளியிட்டார்.