Home News Kollywood ‘ராயன்’ படத்தின் அடுத்த பாடல் 24-ஆம் தேதி வெளியாகிறது!

‘ராயன்’ படத்தின் அடுத்த பாடல் 24-ஆம் தேதி வெளியாகிறது!

தமிழ்த் திரைஉலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ்  இயக்கி நடிக்கும் அவரது ஐம்பதாவது படமான ‘ராயன்’ திரைப்படத்தின் முதல் பாடல் 09/05/2024-அன்று வெளியாகி இருந்தது.

முதல் பாடல் வெளியீட்டிலேயே படம் வரும் ஜூன் மாதம் 13-ஆம் தேதி திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பும் வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது தயாரிப்பு தரப்பில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 25-ஆம் தேதி இத்திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகிறது. அதற்கான அறிவிப்பு போஸ்டரில் சந்தீப் கிஷனும் அபர்ணா பாலமுரளியும் ஒரு சைக்கிளில் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது இவர்கள் இருவருக்கான பாடலாக இருக்கும் என்று தெரிகிறது. எப்பொழுதும் போல ‘இசைப் புயல்’ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் இசையில் ஒவ்வொரு பாடலும் கேட்க கேட்கத்தான் இனிமையாக இருக்கும் என்பது ரசிகர்களின் கூற்றாக உள்ளது. அதேபோல இத்திரைப்படத்திலும் அனைத்து பாடல்களும் அமையும் என்று நம்புவோம்.

இத்திரைப்படத்திற்கு ‘இசைப் புயல்’ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க,ஒம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய,பிரசன்னா.ஜி.கே படத்தொகுப்பை கவனிக்கிறார்.சண்டைப் பயிற்சியாளாராக பீட்டர் ஹெய்னும்,தயாரிப்பு வடிவமைப்பாளராக ஜாக்கியும் பணியாற்றுகின்றனர்.

படம் வருகிற ஜூன் 13-ஆம் தேதி வெளியாகின்றது.