
தமிழ்த் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில், பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கத்தில், ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படம் 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்டது. பல்வேறு பிரச்சினைகள் இந்த படத்தயாரிப்பிலும் படப்பிடிப்பிலும் நடந்ததால் படம் உருவாவதிலும் வெளியாவதிலும் தாமதம் ஏற்பட்டது.


பின்னர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் லைகா உடன் சேர்ந்து படத்திற்கான தயாரிப்பு வேலைகளை 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் மீண்டும் துவங்கியது. ஒரு வழியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

அதே நேரத்தில் படம் நீண்ட நாட்கள் படப்பிடிப்பில் இருந்ததால் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டு, இந்தியன்-2 மற்றும் இந்தியன்-3 ஆகிய இரு பாகங்களாக வெளிவர உள்ளது. இத்திரைப்படத்தில் உலக நாயகனுடன் சித்தார்த், காஜல் அகர்வால்,ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக் கனி,பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர்,குல்சன் குரோவர்,பியூஷ் மிஸ்ரா மற்றும் மறைந்த நடிகர்களான நெடுமுடி வேணு,விவேக், மனோபாலா போன்ற முன்னணி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு இளைஞர்களின் இதயத்துடிப்பை எகிர வைக்கும் அனிருத் இசையமைத்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.கலை இயக்குனராக முத்துராஜ் மற்றும் சண்டை பயிற்சி இயக்குனர்களாக இரட்டையர்கள் அன்பறிவு பணியாற்றுகிறார்கள்.
இத்திரைப்படம் ஜூன்,2024-இல் வெளியாகும் என்றும் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வாமாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.