டோவினோ தாமஸ் நாயகனாக நடித்துள்ள ‘நடிகர்’ என்ற மலையாள திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளனர். மே 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ‘நடிகர்’ என்பதை அவரது தோற்றமும் செயல்பாடுகளும் உறுதி செய்கின்றது. அதிகாரத்துடன் வலம் வரும் ஒரு நடிகரின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் இந்த படம் பேசும் என்பதை ட்ரெய்லரின் காட்சிகள் உணர்த்துகின்றன. ‘டோவினோ’ கெட்டப்பும் பின்னணி இசையும் கவனம் பெறுகிறது.
‘லால் ஜூனியர்’ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இது. இவர் மலையாள நடிகர் ‘மோகன்லால்’ அவர்களின் மகன் ஆவார். ‘சௌபின் ஷாஹிர்’, ‘இந்திரன்ஸ்’ உள்ளிட்ட பலர் நடித்துள்ள, இப்படத்திற்கு ‘யாக்சன் கேரி’ மற்றும் ‘நேஹா நாயர்’ ஆகியோர் இசையமைத்துள்ளனர்.