V4UMEDIA
HomeGalleryCelebrities'அரண்மனை-4' திரைப்படத்தின் திரை முன்னோட்டம் வெளியானது!

‘அரண்மனை-4’ திரைப்படத்தின் திரை முன்னோட்டம் வெளியானது!

சுந்தர்.சி எழுதி, இயக்கி, நடித்துள்ள அரண்மனை-4 திரைப்படத்தின் திரை முன்னோட்டம் வெளியானது. இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், டெல்லி கணேஷ், மற்றும் கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் குஷ்பு அவர்களின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் மற்றும் ஏ.சி.சண்முகம் அவர்களின் மகன் அருண்குமார் அவர்களின் பென்ஸ் மீடியா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு ‘ஹிப்ஹாப் தமிழா’ ஆதி இசையமைக்க, E.கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். இத்திரைப்படத்தில் ஃபென்னி ஆலிவர் பட தொகுப்பாளராகவும், பிருந்தா மாஸ்டர் நடன இயக்குனராகவும், குருராஜ் கலை இயக்குனராகவும், ராஜசேகர் சண்டை பயிற்சி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளனர்.

இத்திரைப்படத்தின் திரை முன்னோட்டம் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சுந்தர்.சி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இத்திரைப்படம் ஏப்ரல்,2024-ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments