மலையாளத் திரையுலகுக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. 2024-ஆம் ஆண்டு பிறந்ததிலிருந்து இதுவரைக்கும் அவர்கள் 5-க்கும் மேற்பட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்துள்ளார்கள்.
அதுவும் பிப்ரவரி மாதத்தில் வெளிவந்த ‘பிரேமலு’,’பிரமயுகம்’,’மஞ்ஞுமல் பாய்ஸ்’ ஆகிய மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றித் திரைப்படங்களாக அமைந்தன. அதில் மிகவும் பேசப்பட்ட திரைப்படமான ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’ திரைப்பட குழுவினருக்கு கேரளத்தை தாண்டி தமிழ்நாட்டிலும் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களுக்கு பல்வேறு விதமான அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளது. அவ்வகையில் நேற்று அவர்களுக்கு ‘கலாட்டா கோல்டன் ஸ்டார்ஸ்’ விருது வழங்கும் நிகழ்ச்சியில் விருதும் வழங்கப்பட்டது.
அதேபோல மஞ்ஞுமல் பாய்ஸ் படக் குழுவினர் தமிழகத்தில் ‘உலகநாயகன்’ கமல்ஹாசன்,விக்ரம்,தனுஷ்,சிலம்பரசன் போன்ற முன்னணி திரைக் கலைஞர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அவ்வகையில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களையும் சந்தித்து படத்தின் வெற்றியை பற்றி பகிர்ந்து கொண்டனர். ‘சூப்பர் ஸ்டார்’ரஜினிகாந்த் அவர்களும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொண்டார்.
இது அவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியை தருவதாக படக் குழுவினர் தெரிவித்தனர்.