V4UMEDIA
HomeGalleryCelebritiesதலைவர் நடிக்கும் 171-வது படத்தின் முதல் தோற்றம் வெளியானது!

தலைவர் நடிக்கும் 171-வது படத்தின் முதல் தோற்றம் வெளியானது!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களின் 171-வது படத்தின் முதல் தோற்றம் சன் பிக்சர்ஸின் அதிகாரப்பூர்வ ‘X’ வலைத்தள பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது!

இத்திரைப்படத்தின் தலைப்பு முன்னோட்ட காணொளி வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி வெளியாகும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களின் முந்தைய படமான ஜெயிலர் மாபெரும் வெற்றி அடைந்ததால் ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் அவர்கள் சமீபத்தில் மாபெரும் வெற்றி கொடுத்த லியோ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இத்திரைப்படத்தில் இணைகின்றனர். இப்படத்திற்கான சண்டைக் காட்சிகளை இரட்டை இயக்குனர்களான அன்பறிவு உருவாக்குகின்றனர்.

Most Popular

Recent Comments