‘சிறுத்தை’சிவா இயக்கத்தில் சூர்யா சமீபத்தில் நடித்த ‘கங்குவா’ திரைப்படத்தின் டீசர் கடந்த வாரம் வெளியானது. அது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்றைப் பெற்றது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் நாற்பத்து நான்காவது திரைப்படத்தின் அறிவிப்பை தனது ‘X’ வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இத்திரைப்படத்தை இயக்கப்போவது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. சூர்யா, சுதா, கொங்கரா மற்றும் ஜி.வி.பிரகாஷ் இணையும் திரைப்படம் தள்ளிப் போகிறது. இதனிடையே இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இத்திரைப்படம் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து தயாரிப்பதாக அந்த அறிவிப்பிலேயே தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இவ்விருவரும் இணையும் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.